அட சிவ சிவா அப்படியாப்பா?

|

'எல்லாம் சொல்லுமாம் பல்லி கழனிப் பானையில விழுமாம் துள்ளி' என்கிற கதையாக... அந்த நட்சத்திர சேனலில் அறிமுகமாக தத்துப்பிள்ளை, பெத்த பிள்ளை செல்லப்பிள்ளை என்று வளர்த்து விடப்பட்டவர் சிவமான நடிகர். மெரீனா கடற்கரையோரம் ஒதுங்கியவருக்கு சரியான திரையில் காற்று வீச தமிழ் சினிமாவில் உச்ச நடிகரின் பெயரில் படம் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

நடிகராக உயர்ந்த பின்னும் அந்த நட்சத்திர டிவி சேனலின் விருது விழாவை சில ஆண்டுகள் தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டு அவருக்கே விருது கொடுத்து அவர் அழுததை ப்ரோமோ போட்டே ஓட்டி எடுத்தார்கள்.

இதை நினைத்துக்கொண்டே இருந்திருப்பார் போல, இந்த ஆண்டு விருது விழாவில் மேடை ஏறிய சிவமானவரின் பேச்சுதான் ஹைலைட். அதாகப்பட்டது தவிச்ச வாய்க்கு தண்ணி தரமாட்டாங்க. விடிய விடிய நிகழ்ச்சி நடக்கும் புளி சோறு, கட்டுச்சோறு கட்டிக்கிட்டு வந்திருங்க என்று பேசினார்.

இதை டிவி தரப்பினர் ரசிக்கவில்லையாம். எனவே கூப்பிட்டுவிட்ட ரெய்டில் சத்தம் இல்லாம எஸ்கேப் ஆகிவிட்டாராம் சிவமானவர்.

வில்லத்தனக்கு மாறிய வித்யமான நடிகை

தமிழ் சீரியல்களில் இப்போதெல்லாம் ஹீரோயின்களை விட வில்லி கதாபாத்திரங்களில் நடிக்கவே நடிகைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கண்களை உருட்டி மிரட்டி, சிரித்துக்கொண்டே மைன்ட் வாய்ஸ்சில் பேசும் சீன்கள்தான் அதிக அளவில் சீரியல்களில் இடம் பெறுகின்றன.

ஹீரோயின்களை விட வில்லிகளுக்கே ரசிகைகள் அதிகம் என்பதால் ஏராளமானோர் வில்லத்தனத்துக்கு மாறி வருகின்றனர். திருமணத்திற்கு முன்பு குடும்பபாங்கினி தோற்றத்தில் அமைதிப்புறாவாக நடித்த வித்யமான நடிகைக்கூட இப்போது வில்லித்தனம் செய்ய வந்துவிட்டார்.

சூரியடிவியில் தென்றலான தொடரில் புயலாய் வந்து கலக்கினார். அதில் கிடைத்த வரவேற்பை பார்த்து தற்போது ஊஞ்சல் தொடரிலும், இலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராசியான தொடரிலும் வில்லத்தனம் செய்யப்போகிறாராம் வித்யமான நாயகி...

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்கிறாராம் வித்யமானவரின் கணவர்.

 

Post a Comment