சென்னை: விஷால் நடிக்க உருவாகப் போகும் சண்டைக் கோழி 2ம் பாகத்தில் நாயகியாக அக்ஷரா ஹாசன் நடிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
விஷாலுக்கு ஹிட் கொடுத்த படம் சண்டைக்கோழி. 2005ம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஷாலின் சண்டைக் காட்சிகள் பேசப்பட்டது போல அவருக்கு நிகராக நாயகி மீரா ஜாஸ்மினின் அசத்தல் நடிப்பும் பேசப்பட்டது. அவரது குறும்புத்தனம் படத்துக்கு உயிரோட்டமாக அமைந்தது. லிங்குச்சாமிதான் இயக்குநர்.
தற்போது லிங்குச்சாமிக்கும், விஷாலுக்கும் இறங்குமுகமாக உள்ளது. அவர்களது படங்கள் முன்பு போல ஓடுவதில்லை. இந்த நிலையில் மீண்டும் சண்டைக் கோழியை கையில் எடுக்கிறார்கள் இருவரும். அதன் 2ம் பாகத்தைத் தயாரிக்கும் வேலை தொடங்கியுள்ளதாம்.
விஷாலுக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷராவை நாயகியாக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. அவரிடம் பேசி வருகிறார்களாம்.
அக்ஷரா ஹாசன் இந்தியில் தற்போது பிசியாக உள்ளார். அவர் தமிழுக்கு வருவாரா என்பது தெரியவில்லை. ஏற்கனவே விஷால், அக்ஷ்ராவின் அக்கா ஸ்ருதி ஹாசனுடன் பூஜை படத்தில் இணைந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அப்புறம் இன்னொரு முக்கிய சமாச்சாரம்... முதல் பாகத்தில் கலக்கிய மீரா ஜாஸ்மினும் படத்தில் இருக்கிறாராம்.. நாயகியாக அல்ல.. முக்கிய கேரக்டரில் வருகிறாராம்.!
அப்ப ராஜ்கிரண்...?
Post a Comment