செல்வராகவனின் புதிய படம் தொடங்கியது!

|

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

காதல் கொண்டேன்', ‘7ஜி ரெயின்போ காலனி', ‘புதுப்பேட்டை' உட்பட பல வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குனர் செல்வராகவன்.

இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு புதிய படங்கள் இயக்காமல் இருந்தார்.

Selvaraghavan starts his new movie

இப்போது சிம்புவை வைத்து புதிய படம் தொடங்கியுள்ளார். இந்தப் படத்தில் முதலில் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் திடீரென படத்திலிருந்து வெளியேறினார்.

அவருக்கு பதில் மெட்ராஸ் படத்தில் நடித்த கேதரின் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார். முக்கிய வேடத்தில் டாப்சி நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜெகதி பாபுவும் முன்னாள் கதாநாயகனான சுரேஷும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. சென்னை புறநகர், ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக்கத்திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தை குளோ ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் கீதாஞ்சலி செல்வராகவன் இருவரும் தயாரிக்கின்றனர்.

யுவன் சங்கர்ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

 

Post a Comment