விஜய்யின் புலி படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கும், அஜீத் படம் தீபாவளிக்கும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் இப்போது சிம்பு தேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். ஹன்சிகா, ஸ்ருதிஹாஸன் ஜோடியாக நடிக்க, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை விஜய்யின் மேனேஜர் பிடி செல்வகுமாரும் தமீம் பிலிம்ஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.
படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
தலை 56
அடுத்து அஜீத் படம். இந்த ஆண்டின் பெரிய ரிலீசாக வரவிருக்கும் அஜீத்தின் 56வது படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போது கோடையை முன்னிட்டு படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள அஜீத், அடுத்த வாரம் மீண்டும் தொடங்குகிறார்.
சிவா இயக்கும் இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்தை ஏஎம் ரத்னம் தயாரிக்கிறார்.
Post a Comment