தொடர்ந்து நடுத்தர பட்ஜெட் படங்களில் நடிக்க ரஜினி முடிவு செய்திருப்பதன் விளைவாக, தங்களுக்கும் கால்ஷீட் வேண்டும் என ரஜினியிடம் பல நிறுவனங்கள் அணுகி வருகின்றன.
தயாரிப்பாளரும் இயக்குநருமான லிங்குசாமியும் ரஜினியின் கால்ஷீட்டைப் பெறும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.
லிங்காவுக்குப் பிறகு, சில மாதங்கள் அமைதி காத்த ரஜினி, அடுத்தடுத்து புதுப் படங்கள் பண்ணும் முடிவுக்கு வந்துள்ளார்.
இப்போதைக்கு மூன்று படங்களில் ரஜினி நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
அவை ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிக்கும் படம். இந்தப் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகப் போகிறது.
அடுத்த இரு படங்களில் ஒன்றை ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும், மற்றொன்றை அய்ங்கரன் நிறுவனத்துக்கும் பண்ணப் போவதாகக் கூறப்படுகிறார்கள்.
இந்த நிலையில் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இயக்குநர் லிங்குசாமியும் ரஜினியிடம் கால்ஷீட் கேட்டுள்ளாராம். ரஜினியுடன் நல்ல தொடர்பில் இருப்பவர் லிங்குசாமி. தன்னை தீவிர ரஜினி ரசிகராக வெளிப்படுத்திக் கொள்பவர்.
அஞ்சான் படத் தோல்வி, உத்தம வில்லன் படத்தில் அவருக்கு ஏற்பட்டுள்ள பெரிய இழப்பு, நெருக்கடிகள் போன்றவற்றைத் தெரிந்து கொண்ட ரஜினியும் லிங்குசாமிக்கு உதவ முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
Post a Comment