மாசு என்கிற மாசிலாமணி படத்தில் இரு வேடங்களில் தோன்றும் சூர்யா, ஒன்றில் ஈழத்து இளைஞராக நடித்துள்ளாராம்.
சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி' படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.
இப்படத்தில் சூர்யா அப்பா-மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்பட்டது.
இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, 'மாசு படத்தில் சூர்யா இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அதில் ஈழத் தமிழனாக ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். ஒரு ஈழத்தமிழனாக சூர்யா நடிப்பது இதுதான் முதல் முறை. அதனால், படத்தை மகிழ்ச்சியோடு பாருங்கள்," என்று கூறியுள்ளார்.
‘மாசு' படம் பேய் படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு' சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். பிரேம்ஜி, சமுத்திரகனி, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Post a Comment