சூர்யா, அஜீத் படங்களில் சந்தானத்தை 'தூக்கிய' சூரி!

|

சூர்யா நடிக்கும் சிங்கம் 3 மற்றும் அஜீத் நடிக்கும் 56 வது படம் ஆகியவற்றிலிருந்து சந்தானம் தூக்கப்பட்டார். அவருக்கு பதில் பிரதான காமெடியனாக சூரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடியன் என்ற இடத்திலிருந்த சந்தானம் கதாநாயகனாக நடிக்கவே அதிகம் ஆசைப்படுகிறாராம். நம்மால்தானே இந்த பெரிய ஹீரோக்கள் படங்கள் ஓடுகின்றன.. நாமே தனித்து நடித்தால் நல்ல வரவேற்பிருக்கும் எண்ணத்தால், இப்போது இரு புதிய படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Soori becomes No 1 comedian in Tamil

வருகிற புதுப்பட வாய்ப்புகளையும் உதறுவதிலேயே குறியாக இருக்கிறாராம்.

இன்னொரு பக்கம் வடிவேலு. அரசியல் பிரச்சினைகள் அனைத்தும் ஓய்ந்து, அவரது தெனாலிராமன் படம் வந்ததும், பல பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் அவரை காமெடி வேடங்களுக்கு அணுகியுள்ளனர். ஆனால் அதையெல்லாம் மறுத்துவிட்டு, எலி படத்தில் மீண்டும் கதாநாயகனாகியுள்ளார்.

இந்த இருவருமே நடித்தால் நாயகன் வேடம்தான் என்பதில் அடமாக இருப்பதால், இப்போது சூரிக்கு நம்பர் ஒன் காமெடியன் இடம் கிடைத்திருக்கிறது.

அதன் விளைவு முன்னணி நடிகர்களான அஜீத், சூர்யாவுடன் இணைந்துள்ளார். சூர்யாவுடன் ஏற்கெனவே அவர் அஞ்சானில் நடித்துவிட்டார். ஆனால் அஜீத்துடன் நடிப்பது இதுதான் முதல் முறை.

 

Post a Comment