சென்னை: காஞ்சனா 2 படத்தின் வெற்றி நாயகி டாப்சி தன் தங்கை மற்றும் சில தோழிகளுடன் இணைந்து வெட்டிங் பாக்டரி என்ற பெயரில் திருமணத்தை நடத்தித் தரும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்.
ஆடுகளம் படத்தில் அறிமுகமான நடிகை டாப்சி அதற்குப் பின் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் தமிழ் சினிமாவில் பெரிதாக பேசப் படாத நடிகையாக இருந்த இவரை நடிகர் லாரன்ஸ் தனது காஞ்சனா 2 படத்தில் நடிக்க வைத்தார்.
காஞ்சனா 2 படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் தற்போது டாப்சி என்ன செய்தாலும் அது செய்தி ஆகி விடுகிறது.
டென்மார்க்கைச் சேர்ந்த பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை டாப்சி காதலிப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளிவந்த நிலையில் வெட்டிங் பாக்டரி ஆரம்பித்து உள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.
தமிழில் சிம்புவுடன் ஒரு படம் ஜெய்யுடன் ஒரு படம் தெலுங்கில் ஒரு புதுப் படம் என்று பிசியான நடிகையாக இருந்தாலும் பிசினசிலும் பிசியாகவே இருக்கிறார் டாப்சி.
இப்போது உள்ள நடிகைகள் எல்லாருமே சொந்தமாக ஒரு பிசினசை ஆரம்பித்து அதனைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகின்றனர்..அந்த லிஸ்டில் சமீபமாக இணைந்திருக்கிறார் டாப்சி.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்...!
Post a Comment