நானும் ரெடி… நானும் ரெடி… தயாரான மந்திரம்!

|

அந்தமாதிரி விசயங்களை கூச்சப்படாமல் பேசி வாசகர்களைக் கவர்ந்தவர் அந்த தொகுப்பாளின். சமையலில் மந்திரம் செய்த அவருக்கு பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பது என்றால் பாயாசம் சாப்பிடுவது போல. தயக்கமே இல்லாமல் பதில் சொல்லுவார். இவரது பேச்சுக்கும், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கும் தனி ரசிகர்களே இருக்கிறார்களாம். இது ஒருவிதமான மருத்துவ நிகழ்ச்சி என்று கூறும் மந்திரத்திற்கு தயாரின் ஆதரவு அமோகமாக உண்டாம்.

மந்திர நிகழ்ச்சிக்கு புகழை விட விமர்சனம்தான் அதிகம் என்றாலும் அதைப்பற்றி எல்லாம் கவலையில்லையாம் மந்திரத்திற்கு. காரணம் அம்மாவின் ஆதரவு இருக்கும் போது எதற்கு கவலைப்படவேண்டும் என்று கேட்கும் மந்திரத்திற்கு சினிமா ஆசை அதிகமாக இருக்கிறதாம். நடிக்க நானும் ரெடி என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் மந்திரம். ஆனால் சினிமா இயக்குநர்கள் தயாராக இருக்கணுமே என்கின்றனர் சின்னத்திரை ரசிகர்கள்.

பட்ஜெட் குறைஞ்சாலும் தரம் குறையாதாம்

நட்சத்திர டிவி சேனலின் சீரியல்களுக்கு தனி வரவேற்பு உண்டு. காரணம், கதை, திரைக்கதை அசத்தும் ட்விஸ்ட்கள். அழுகை,ஆர்ப்பாட்டம் என்று எதுவும் இருக்காது.

ஸ்டெடி காமராதானாம், ஒரே இடத்திலேயே காட்சிகளை அமைத்து படமாக்கி விடுகின்றனர். இதனால் செலவு கம்மியாம். ஒரே இடத்தில் படமாக்கினாலும் கதையில் கவனம் செலுத்தினால் சீரியல் ஜெயிக்கும் என்கின்றனர் நட்சத்திர சேனல்காரர்கள்.

 

Post a Comment