லிங்கா' படத்தையடுத்து ரஜினி 'மெட்ராஸ்' பட இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். நயன்தாராதான் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.
கலைப்புலி தாணு தயாரிக்கப் போகும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனாலும், அந்தப் படத்துக்கான அலுவலகம் அமைக்கப்பட்டு வேலைகளும் தொடங்கிவிட்டன.
இது தவிர்த்து ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செல்வில் ஒரு அறிவியல் சார்ந்த படத்தில் ரஜினி நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. இவை தவிர, ஆஸ்கர் ரவிச்சந்திரன், ஞானவேல் ராஜா, லிங்குசாமி ஆகியோரும் ரஜினியின் தேதிகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘பாஸ்கர் த ராஸ்கல்' படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினி அப்படத்தை ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என விரும்பினாராம்.
இந்தப் படத்தின் தமிழ் உரிமையை ஏற்கனவே எஸ்.எஸ்.துரைராஜ் வாங்கி வைத்துள்ளாராம். இவர் ஏய், பாறை, சதுரங்கம் போன்ற படங்களைத் தயாரித்தவர்.
ரஜினியிடம் இந்தப் படத்தின் உரிமை, ரீமேக் குறித்து எஸ்எஸ் துரைராஜ் ஏற்கெனவே பேசியுள்ளாராம். இந்த நிலையில்தான் தாணு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார் ரஜினி.
எப்படியும் தமக்கு கால்ஷீட் தந்துவிடுவார் என்ற நம்பிக்கையில், பல கோடி பைனான்ஸை ஏற்பாடு செய்துவிட்டுக் காத்திருக்கும் எஸ் எஸ் துரைராஜ், ‘பாஸ்கர் த ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினியைத் தவிர வேறு யார் நடித்தாலும் சரியாக வராது என்று முடிவு செய்து காத்திருக்கிறார்.
Post a Comment