ஒரு உறவு முறிந்தால், அடுத்த உறவுக்கு கை நீள்வதும், ஒரு திருமணம் நின்றால்.. வேறு ஜோடி அமைவதும் சினிமாவில் மட்டுமல்ல.. நிஜத்திலும் நடக்கவே செய்கிறது.
அதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது த்ரிஷா - ராணா ஜோடி.
ராணாவுடன் அநியாயத்துக்கு நெருக்கமாக சுற்றிக் கொண்டிருந்தவர் த்ரிஷா. இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள் எனும் அளவுக்கு முன்பு கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தன.
ஆனால் அதையெல்லாம் டமாரென்று ஒரு நாள் உடைத்தார் த்ரிஷா. ராணாவின் உறவையும் உதறினார்.
அடுத்த சில மாதங்களில் த்ரிஷாவுக்கும் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததும். தனி ப்ளைட்டில் இருவரும் ஊர் சுற்றியதும், இப்போது நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டதும் ஊரறிந்தது.
இந்த உறவு முறிந்த அடுத்த சில வாரங்களில் த்ரிஷாவும் ராணாவும் மீண்டும் ஜாடை மாடையாக பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். முதலில் ட்விட்டரில் ஆரம்பித்த இந்த மறு உறவு, இப்போது மீண்டும் ஜோடியாக சுற்றும் அளவுக்குப் போயிருக்கிறது.
சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த நடிகர் மோகன் பாபு மகன் மஞ்சு மனோஜ் திருமண சங்கீத் நிகழ்ச்சிக்கு இருவரும் ஜோடியாக வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
சரி, மீடியாவுக்கு பஞ்சமில்லாமல் செய்தி தரப் போகிறார்கள். வாழ்க!
Post a Comment