ஏ ஆர் முருகதாஸ் இயக்கி, தமிழில் பெரும் வெற்றி பெற்ற ரமணா படம் இந்தியில் கப்பர் ஈஸ் பேக் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்து பாராட்டியுள்ளார் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால்.
க்ரிஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தில் கரீனா கபூர் 'தேரி மேரி கஹானி' என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.
இந்தப் படம் மே 1ம் தேதி ரிலீஸானது. இதுவரை ரூ 70 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.
இப்படத்தை சமீபத்தில் டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பார்த்தார்.
பார்த்து முடித்ததும் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கப்பர் ஈஸ் பேக்' படம் பார்த்தேன். அற்புதமான படம். கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டும்' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் கதைக் கருவே லஞ்சம், ஊழலுக்கு எதிரானது என்பதால் கெஜ்ரிவாலுக்கு ரொம்பப் பிடித்துவிட்டதாம்.
Post a Comment