பிரபல தமிழ் தொலைக்காட்சியில் புடவை கட்டி தொகுப்பாளினியாய் வலம் வந்த அந்த லட்சுமிகரமானவருக்கு திடீரென்று நட்சத்திர சேனலில் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ஒரே சேனலில் 2 சீரியல்களில் நடித்த அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. விளம்பர வாய்ப்பும் வரத் தொடங்கவே மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போனார் லட்சுமிகரம். அதிர்ஷ்டக்காற்று வீச பெரிய திரை வாய்ப்பும் சிக்கியது.
பெரியதிரை அழைப்பை மறுக்காமல் ஒத்துக்கொண்டார். இரண்டு படங்களிலும் தங்கை கதாபாத்திரம்தான் என்றாலும் சரி என்று சொல்ல காரணம் ஒருநாள் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தானாம். நம்பிக்கை அதானே எல்லாம்.
அடுத்த பாடகி ரெடி...
ஒரே நேரத்தில் 2 படங்கள் ரிலீஸ் ஆகி லக்கி ப்ரைஸ் அடித்த நித்யமான நாயகி சூரிய தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தபோது மணியான இயக்குநரை விட பேய் பட இயக்குநரைத்தான் அதிகம் புகழ்ந்தார். அந்த படத்தில் நடித்ததை விட பேய் படத்தில் நடித்ததே தனக்கு சவலாக இருந்தது என்று சொன்னார்.
மணியான இயக்குநர் படத்துக்கு லைவ் டப்பிங் என்பதால், வசனம் பேச முடியாமல் சிரமப்பட்டாராம். பிறகு இயக்குநரின் மனைவிதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து உதவி செய்தார் என்றும் கூறிய
நித்யமான நடிகை தனது, அழகான குரல் வளம் இருக்கிறது என்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்க அசத்தலாய் ஒரு பாடலைப் பாடினார். நடிப்போடு பாடவும் தெரிகிறதே என்று இதைக் கேட்டு ரசிகர்கள் பாராட்டியிருக்கிறார்களாம். இசையமைப்பாளர்களே தயாரா? மல்லுவுட் பாடகி நடிகைகள் வரிசையில் இன்னொரு பாடகி இணையப்போகிறார் என்று கோலிவுட் பட்சி கூவிக்கொண்டு செல்கிறது.
Post a Comment