அஜ்மீர்: பாலிவுட் இதழில் ஆபாசமாக போஸ் கொடுத்ததாக சன்னி லியோன் மீது ராஜஸ்தான் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
புகழ் பெற்ற நீலப்பட நடிகையாக இருந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சில பாலிவுட் இதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது.
இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்தவர் அரிஞெய் ஜெயின் என்பவர், அஜ்மீர் கொதவாலி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பொழுதுபொக்கு அம்சங்கள் இருக்க வேண்டிய பாலிவுட் இதழில் சன்னி லியோனின் ஆபாச படங்கள் இடம் பெற்று உள்ளது. அந்த இதழின் இணையதளத்தை ஓப்பன் செய்த போதும் அதில் சன்னி லியோனின் ஆபாச படங்கள் அதிக அளவு இடம் பெற்று உள்ளது' என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், ஆபாச புத்தகம் விற்பனை, அருவருப்பாக நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சன்னி லியோன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் கூகுள் தலைமை செயல் அதிகாரி லேரி பேஜ் மீதும், சம்பந்தப்பட்ட பாலிவுட் இதழ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Post a Comment