சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள், மலைக்க வைக்கும் சாகசங்களின் மூலம் உலகம் முழுவதும் உள்ள ஆக்ஷன் பட ரசிகர்கள் மத்தியில் தனக்கென நிலையான ஒரு இடத்தை பிடித்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், மாரடைப்பால் இறந்து விட்டதாக சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகின.
ஜக்கி சானின் மரணத்தை உறுதிப்படுத்தும் விதமாக, எனது இழப்பை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இந்த துயரத்தை, என்னுடன் சேர்ந்து நீங்களும் உணர்வீர்கள் என்று நினைக்கிறேன் என ஜாக்கி சானின் மனைவி லின் பெங் ஜியாவ் குறிப்பிட்டிருந்ததாக ஒரு உபரி தகவலும் அந்த செய்தியில் வெளியாகியிருந்தது.
I was shocked by two news reports when I got off the plane. First of all, don't worry! I'm still alive. Second,... http://t.co/EnvVR7OMqu
— Jackie Chan (@EyeOfJackieChan) May 16, 2015 இந்த செய்தியை உண்மை என்று நம்பிய பல்லாயிரக்கணக்கானோர் தங்களது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தனர். அதை லட்சக்கணக்கானவர்கள் ‘ஷேர்' செய்ததில் காட்டுத்தீ போல் இந்த செய்தி படுவேகமாக பரவியது.
இந்நிலையில், தனது அதிகாரபூர்வ 'வெய்போ' (ட்விட்டர் போல சீனாவின் பிரபலமான சமூக வலைத்தளம்) மூலம் இந்த வதந்திக்கு ஜாக்கி சான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நான் நல்ல உடல்நலத்துடன் உயிருடன் இருக்கிறேன். மாரடைப்பால் நான் மரணமடைந்து விட்டதாக வந்துள்ள தகவல்கள் வெறும் புரளி என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment