சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவர இருக்கும் பாயும் புலி படம் வெற்றி அடைந்தாலும் தோல்வி அடைந்தாலும் அதைப்பற்றிக் கவலைப் பட போவதில்லை என் அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான விஷால் கூறியுள்ளார்.
ஹெலிகாப்டரில் சென்று குளிர்பானத்துக்கு லிப்ட் கொடுத்து உதவுவது, ஜீப்பின் டாப்பில் அமர்ந்து கொண்டே வானத்தில் பறந்து வருவது போன்ற செயல்களை செய்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் நடிகர் விஷால்.
இவரின் நடிப்பில் வெளிவர இருக்கும் பாயும் புலி படமும் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் புலி படமும் ஒரே நாளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. அதற்கு முன்பே விஷாலின் இந்த அதிரடி அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
2012ல் சிவகங்கை மாவட்டத்தில் சப்இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், அதன் பின்னணியும் தான் கதையாம்.
படத்தின் ரிசல்ட் எப்படி வந்தாலும் அது குறித்து தான் கவலைப்படப் போவதில்லை என்று கூறியுள்ள விஷாலுக்கு சமீப காலத்தில் பெரிய ஹிட் என்று எதுவும் அமையாமல் போனது ஆச்சரியம்தான்.
Post a Comment