கூல் டிரிங்ஸ் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – சிவகார்த்திகேயன்

|

சென்னை: ஒரு படத்தில் நடித்தவுடனே அந்த பெயர் புகழை வைத்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் பல கோடி ரூபாய் வருமானம் தரக் கூடிய குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் நம்ம சிவகார்த்திகேயன்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள சிவகார்த்திகேயனின் புகழைப் பார்த்த குளிர்பான கம்பெனி தொடர்ச்சியாக அவரை அணுக ரசிகர்களுக்கு கேடு விளைவிக்கும் எந்த ஒரு விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன் என்று கறாராக கூறி விட்டாராம்.

இந்த விஷயம் எப்படி வெளிவந்தது என்று கேட்கிறீர்களா ட்விட்டர் மூலமாகத் தான். கோலா விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று சிவகார்த்திகேயன் சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவரது ரசிகர் ஒருவர் ட்விட் செய்ய அதை ரீட்விட் செய்திருக்கிறார் சிவா.

உங்களை நெனைச்சா ரொம்ப பெருமையா இருக்கு சிவா...!

 

Post a Comment