சென்னை: அரண்மனை பார்ட் 2 படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் நடிகை த்ரிஷா, இயக்குனர் சுந்தர்.சி அப்படத்திற்கு இன்னொரு ஹீரோயின் தேடுவதை அறிந்து நடிகை பூனம் பஜ்வாவை அப்படத்திற்கு சிபாரிசு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் இன்னொரு நடிகரை சிபாரிசு செய்வது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் ஒரு நடிகை இன்னொரு நடிகையை சிபாரிசு செய்வது கனவிலும் நடவாத ஒன்று, என்ற பழைய விதிகளை உடைத்துக் காட்டியுள்ளார் நடிகை த்ரிஷா.
தமிழில் சேவல் என்ற படத்தில் அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா அதற்குப் பின் நடித்த படங்களான தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் மற்றும் தம்பிக் கோட்டை உள்ளிட்ட எந்த படங்களும் ஓடாததால், நடிகர் விஷாலுடன் ஒருபாட்டுக்கு ஆம்பள படத்தில் ஆடியிருந்தார். ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட்டில் இன்னொரு நாயகியாக நடித்தவருக்கு கைவசம் புதிய படங்கள் எதுவும் இல்லை.
ஏற்கனவே நடிகை த்ரிஷாவுடன் இணைந்து போகி என்ற புதிய படத்தில் (தமிழ், தெலுங்கு) நடித்து வந்தார், அந்த நட்பின் அடிப்படையில் தான் தற்போது பூனத்துக்கு சிபாரிசு செய்திருக்கிறார் த்ரிஷா. ஏற்கனவே ஹன்ஷிகா மற்றும் த்ரிஷா என இரண்டு நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது பூனம் பஜ்வா மூன்றாவது ஹீரோயினாக சேர்க்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர்.சியின் ஆஸ்தான நாயகனான சித்தார்த் இதில் பேயின் கணவராக சாரி கதையின் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.
கதையே இல்லாமக் கூட சுந்தர்.சி படம் எடுத்திடுவாரு,ஆனா ஹன்ஷிகா இல்லாம எடுக்க மாட்றாரு.......!
Post a Comment