பாபநாசம் படத்துக்கு க்ளீன் யு சான்றிதழ்!

|

கமல் ஹாஸன் நடித்த பாபநாசம் படத்துக்கு எந்தக் கட்டும், ஆட்சேபணையும் இல்லாத யு சான்றிதழ் வழங்கியுள்ளது மண்டல தணிக்கைக் குழு.

வைட் ஆங்கிள் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் தயாரித்துள்ள பாபநாசம் படம், மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக். ஜீது ஜோசப் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கமல் ஹாஸனுடன், கவுதமி, பேபி எஸ்தர், நிவேதா தாமஸ், கலாபவன் மணி, இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் பாடல்கள் வெளியாகின.

Papanasam gets clean U

இந்தப் படத்தை இன்று சென்சாருக்கு திரையிட்டுக் காட்டினர். படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தில் எந்த காட்சியையும் வெட்டவில்லை. ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. க்ளீன் யு சான்று வழங்கியுள்ளனர்.

ஜூலை 3-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இப்போது அதைவிட பொருத்தமான தேதி கிடைக்குமா என யோசித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை சன் டிவி வாங்கியுள்ளது.

 

Post a Comment