நம்பர் நடிகைக்கும், அம்மாவுக்கும் இடையே லடாயாமே!

|

சென்னை: திருமணத்தை நிறுத்திய நம்பர் நடிகை மீது அவரது தாய் கோபத்தில் உள்ளாராம்.

சின்ன நம்பர் நடிகையும், அவரது தாயும் அம்மா, மகள் உறவைத் தாண்டி தோழிகள் போன்று பழகி வருகிறார்கள். நடிகையின் கால்ஷீட் சொதப்பாமல் பார்த்துக் கொள்வது, அவருக்கு கதை கேட்பது உள்ளிட்ட வேலைகளை தாய்க்குலம் தான் செய்து வந்தார்.

All is not well between number actress and mom

மகளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று அம்மா விரும்பினார். இந்நிலையில் தான் சின்ன நம்பர் நடிகைக்கும், சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்பாடா ஒரு வழியாக மகள் திருமதி ஆகப் போகிறாள் என்று தாய்க்குலம் மகிழ்ச்சியில் இருந்தார்.

நடிகையோ திருமணத்தை நிறுத்தி தாயின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டார். அந்த கோபத்தில் உள்ளாராம் தாய்க்குலம். இதனால் கால்ஷீட் பார்ப்பது, கதை கேட்பது ஆகிய வேலைகளை நிறுத்திவிட்டாராம். உன் வேலையை நீயே பார்த்துக் கொள் என்று மகளிடம் தெரிவித்துவிட்டாராம்.

செய்தியாளர்கள் தாய்க்குலத்தை அணுகி மகளை பற்றி கேட்டால் முன்பு எல்லாம் தகவல் அளிக்கும் அவர் தற்போதோ தேவை என்றால் அவரிடமே பேசுங்கள் என்று கூறிவிடுகிறாராம்.

 

Post a Comment