சென்னை: தொடர்ந்து பேய்ப் படங்கள் மட்டுமே கோலோச்சி வந்த கோலிவுட்டில் முதல்முறையாக ஒரு காமெடி படமும் காதல் படமும் வந்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளிவந்த சந்தானத்தின் இனிமே இப்படித்தான் மற்றும் ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் படங்களுக்கு மக்கள் சற்றே உற்சாக வரவேற்பு கொடுத்து வரவேற்று உள்ளனர்.
இந்தப் படம் சற்று துவண்டு கிடந்த ஜெயம் ரவிக்கு மீண்டும் சற்று தெம்பைக் கொடுக்கும் என்று தெரிகிறது. மறுபக்கம் இனிமே இப்படித்தான் படத்திற்கு வசூலும் வரவேற்பும் சற்று கம்மி என்றே சொல்கிறார்கள்.
ஜெயம் ரவி - ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த ரோமியோ ஜூலியட் படம் இதுவரை 6.5 கோடி ரூபாயை வசூலித்து இருக்கிறது. அதே சமயம் சந்தானத்தின் நடிப்பில் வெளிவந்த இனிமேல் இப்படித்தான் படம் இதுவரை வெறும் 1.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து உள்ளது.
தற்போதைய ரேஸில் ஜெயம் ரவி முந்துவது போலத் தெரிந்தாலும் முடிவில் யாரின் படம் வசூலைக் குவிக்கும் என்பது இனிமேல் தான் தெரியவரும் பார்க்கலாம்.
Post a Comment