ஹைதராபாத்: நடிகை விசாகா சிங்கைத் தொடர்ந்து, நடிகை சுவாதியும் சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவரின் கமெண்டுக்கு நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். தமிழில் சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமானவர் நடிகை சுவாதி.
இரு தினங்களுக்கு முன்பு நடிகை சுவாதி புடவை கட்டி தான் எடுத்த செல்பி ஒன்றை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்ய, அதனைப் பார்த்த ஒரு ரசிகர் தயவு செய்து இதுபோன்ற புகைப்படங்களை போடாதீர்கள் பார்ப்பதற்கு ஆன்ட்டி போல இருக்கிறீர்கள் என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்.
அவ்வளவு தான் உடைத்த சோடா போல சும்மா பொங்கி எழுந்து ஆமாம் நான் ஆன்ட்டி தான் என்றுமே கலர்ஸ் சுவாதியாக இருக்க முடியாது உங்கள் இலவச ஆலோசனைக்கு நன்றி அங்கிள் என்று கூறியவர் அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை.
நான் பார்த்து வளர்ந்த ஆன்ட்டிகள் எல்லோருமே சூப்பர் பெண்கள்தான் எனது எடை கூடியிருந்து நான் ஆன்ட்டியாக தெரிந்தால் அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை, நீங்கள் சொன்ன கமெண்டை எனது இந்தப் படத்திற்கான பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன் என்று அதற்கு ஒரு நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறார்.
பாவம் அந்த ரசிகர் பயந்து போய் தனது அக்கவுண்டையே டெலீட் செய்துவிட, அவர் கூறியது ஒன்றும் ஆபாசமான கமென்ட் அல்ல அதற்கு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர் தெலுங்குலகத்தினர்.
என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா..........
Post a Comment