இளைய தளபதிக்காக ஜிவியின் இசையில் பாடிய தேனிசைத் தென்றல்

|

சென்னை: 1989ம் ஆண்டு மனசுகேத்த மகராசா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய தேவா இதுவரை தென்னிந்திய மொழிகளில் 400 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை புரிந்திருக்கிறார். கானா பாடல்கள் என்றாலே தேவாவின் இசைதான் என்று அனைவரும் கூறும் அளவுக்கு தமிழ் சினிமாவில் எண்ணற்ற கானாப் பாடல்களை தன் தேனினும் மேலான இசையால் குழைத்துத் தந்தவர்.

Music Director Deva Sing A Song  Vijay’s  Next Movie

இப்பொழுது முன்பு போல படங்களுக்கு அதிக அளவில் இசையமைப்பது இல்லை. சமீபமாக இளம் இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களைப் பாட ஆரம்பித்து இருக்கிறார் தேவா. கடந்த ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற மான் கராத்தே படத்தில் அனிருத் இசையில் ஒரு பாடலைப் பாடி இருந்த தேவா, தற்போது ஜி.வி.பிரகாஷின் இசையில் இளையதளபதி விஜய் இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க இருக்கும் புதிய படத்திற்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

நடிப்பில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் இசையில் தனது 50 வது படம் மேலும் விஜயின் 59 வது படம் என்பதால் பாடல்கள் பேசப்படும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக சிரத்தை பாடல்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஓய்விற்காக லண்டன் சென்றிருக்கும் விஜய் வந்தவுடன் விஜய் 59 படத்தின் பூஜை சென்னையில் பெரிய அளவில் நடைபெற இருக்கிறதாம்.

 

Post a Comment