ஹைதராபாத்: சென்னையில் பிறந்து பல்லாவரத்தில் வளர்ந்த சமந்தாவை தமிழ் உலகம் ஆதரிக்கத் தவறியதால் தெலுங்குக்குப் போனார். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் நான் ஈ படம் தெலுங்கில் அவருக்கு நல்ல ஒரு மார்க்கெட்டைக் கொடுக்க அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
மீண்டும் தமிழுக்கு வந்த சமந்தாவுக்கு, அஞ்சான் சறுக்கினாலும் கத்தி கை கொடுத்தது.
அஞ்சானுக்கு முன்பு வரை தெலுங்கில் பிஸியாக இருந்த சமந்தா கையில் தற்போது அரை டஜன் தமிழ் படங்கள் இருப்பதால், தெலுங்கு தேசத்துக்கே போக முடியவில்லையாம்.
இதனைத் தாங்க முடியாத தெலுங்கு ஹீரோக்கள் 'உங்களுக்காக நாங்க வெய்ட் பண்றோம்.. எங்க கூடவும் நடிங்க' என்று கேட்டுக் கொண்டதால், தற்போது போனால் போகிறது என்று தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்!
சன் ஆப் சத்தியமூர்த்தி படத்தைத் தொடர்ந்து சற்று இடைவெளி விட்ட சமந்தா மீண்டும் தெலுங்குப் படங்களை ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.
தமிழில் விக்ரமுடன் 10 எண்றதுக்குள்ள, தனுஷுடன் வேலை இல்லாப் பட்டதாரி 2 மற்றும் வட சென்னை, விஜயுடன் ஒரு படம், சூர்யாவுடன் 24 போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
Post a Comment