அவருதான் ராஜாவாம்.. இவங்கதான் ராணியாம்.. ஷாருக், பிரியங்காவுக்குக் கிடைத்த புதுப் பெருமை!

|

மும்பை: சமூக ஊடகங்கள் வந்த பிறகு சினிமாவில் அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது, முன்பெல்லாம் படம் பார்த்தோமா வந்தோமா என்று இருந்தவர்கள் தற்போது படம் வெளியான 1 மணி நேரத்திற்குள்ளேயே படத்தைப் பற்றிய செய்திகளை பரப்பி படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானித்து விடுகிறார்கள். தற்பொழுது படத்தின் பாடல்களை எத்தனை பேர் ரசித்தனர், டிரைலரை எவ்வளவு பேர் பார்த்துள்ளனர் போன்றவற்றையும் சேர்த்து தான் படத்திற்கு விளம்பரமே கொடுக்கின்றனர்.

நிலைமை இப்படியிருக்க பாலிவுட் லைப் என்னும் இணையதளம் சமூக ஊடகங்களின் ராஜா மற்றும் ராணியாக இந்தி நடிகர் ஷாருக்கானையும் நடிகை பிரியங்கா சோப்ராவையும் தேர்ந்தெடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக பேசப்படும் இந்தி நடிகர் நடிகை யார் என்று இந்த இணையதளம் நடத்திய வாக்கெடுப்பில் இந்தியாவையும் கடந்து அமெரிக்கா, லண்டன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்திப்பட பிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Shah Rukh Khan and Priyanka Chopra crowned the King & Queen of Social Media!

வாக்குகளின் எண்ணிக்கையில் நடிகர் ஷாரூக்கை சமூக ஊடகங்களின் ராஜா எனவும் நடிகை பிரியங்காவை சமூக ஊடகங்களின் ராணி எனவும் அறிவித்துள்ளனர். இந்த தேர்வுக்கு நன்றி தெரிவித்த ஷாரூக் உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் எனக்கு அன்பையும் ஆதரவையும் வழங்கி வருகின்றனர், தற்போது சமூக ஊடகங்களின் மூலம் வாழ்க்கை இன்னும் சுலப மாகிவிட்டது. என்னை சமூக ஊடகங்களின் ராஜா என்று தேர்ந்தெடுத்த பாலிவுட் லைப் இணையதளத்திற்கும் வாக்களித்த ரசிகர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதே போன்று நடிகை பிரியங்காவும் நான் எப்போதுமே ஒரு ராணியாக ஆசைப்படுவதுண்டு தற்போது சமூக ஊடகங்களின் ராணி என்று தெரிவித்திருப்பதன் மூலம் அந்த ஆசை நிறைவேறி விட்டதாக உணர்கிறேன் என்னை தேர்ந்தெடுத்த ரசிக,ரசிகைகளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் லைப் என்பது இந்திப்பட செய்திகளை சுடச்சுட வழங்கி வரும் ஒரு சமூக (ஆன்லைன்) ஊடகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் எதெதுக்கெல்லாம் போட்டி வைக்கப் போறாங்களோ.............

 

Post a Comment