லாஸ் ஏஞ்செல்ஸ்: ஹாலிவுட் படங்கள் என்றாலே ஒரு பிரமாண்டம் படங்களின் காட்சிகளில் இருக்கும், காட்சிகளில் மட்டுமல்ல வசூலிலும் பிரமாண்டத்தைக் குவிக்கும் திறமை ஹாலிவுட் படங்களுக்கே உள்ள ஒரு பொதுவான அம்சம்.
நேற்று வெளியாகியுள்ள ஜூராசிக் வேர்ல்ட் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. சுமார் 150 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியான இரண்டு தினங்களுக்குள்ளேயே வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா...117 மில்லியன் டாலர்கள். இதே வேகத்தில் சென்றால் மொத்தப் படத்தின் பட்ஜெட்டையும் இன்னும் இரண்டு தினங்களுக்குள் தாண்டி விடும்.
பேய் ஓட்டம், பிசாசு ஓட்டமாக ஓடி வரும் இந்தப் படத்தின் வசூலைப் பார்த்து இன்னும் ஏகப்பட்ட டைனோசர்களை தப்பிக்க விடுவார்கள் போல. படத்தின் கதை, பூங்காவில் இருந்து மனிதனுக்கு எதிரான டைனோசர் தப்பித்து விட, அதனை வழக்கம் போல நம்ம ஹாலிவுட் ஆசாமிகள் எப்படி அடக்குகிறார்கள் என்பதுதான்.
Post a Comment