சென்னை: வளர்ந்து வரும் கதாநாயகர்கள் மற்றும் அறிமுக நாயகர்கள் பேய்களாக நடித்தது போய், இப்போது முன்னணி ஹீரோக்களும் பேய்களாக மாறி வருகின்றனர். காஞ்சனா-2, டார்லிங், டிமாண்டி காலனி மற்றும் மாஸ் படங்களின் வெற்றி, கார்த்தியையும் பேயாக்கியுள்ளது.
தொடர்ந்து பல படங்கள் சறுக்கியதில் விரக்தியடைந்திருந்த கார்த்தி தற்போது மெட்ராஸ் மற்றும் கொம்பன் படங்களின் வெற்றியால் மீண்டும் உற்சாக வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார். தற்போது இயக்குநர் கோகுல் இயக்கத்தில் காஷ்மோரா படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா மற்றும் ஸ்ரீதிவ்யா என இரண்டு கதாநாயகிகளுடன் நடித்து வரும் கார்த்தி இந்தப் படத்தில் முதன் முறையாக பேயாக நடிக்கிறார்.
இதற்கு முன்பு வழக்கமான தனது கேலி, கிண்டல்களுடன் நடித்து வந்தவர் படத்தில் வித்தியாசம் காட்ட வேண்டி இந்தப் படத்தில் பேயாக நடிக்கிறார். தொடர்ந்து பேய்ப் படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட்டடிப்பதால் கார்த்தியும் இந்த பேய் பார்முலாவுக்குள் வந்து விட்டார் போல. படுமிரட்டலாக படம் தயாராகிக் கொண்டிருக்கிறதாம்.
அண்ணன், தம்பி யாரு பேயாக நடிச்சாலும் நயன்தான் ஹீரோயின். அதில் மட்டும் மாற்றமில்லை!
Post a Comment