சென்னை: அடுத்த மாதம் நடக்க விருக்கும் நடிகர் சங்கத் தேர்தலின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்தால் அனேகமாக துணை ராணுவம் வந்து தான் இந்தத் தேர்தலை நடத்தி வைக்க வேண்டும் போல.
நடிகர் சங்கம் தற்போது இரு பிரிவுகளாக பிரிந்து விஷால் அணி மற்றும் சரத்குமார் என இரு அணிகளாக சங்கத் தேர்தலை, எதிர்கொள்ள இருக்கிறது. இதில் மேலும் ஒரு திருப்பமாக நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை எனவே எங்கள் அணி வெற்றி பெறும் என்று நம்புவதாக மதுரையில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பேட்டி அளித்திருக்கிறார் நடிகர் சரத்குமார்.
மேலும் அவர் கூறுகையில் "நடிகர் சங்கத் தேர்தலில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை, எங்களை எதிர்ப்பவர்களின் பின்னணியில் அரசியல் இருப்பது போல தெரிகிறது. எனினும் நாளைக்கே சூழ்நிலைகள் மாறலாம், இன்று கருத்து வேறுபாட்டுடன் மோதிக் கொண்டவர்கள் நாளை சகோதரர்களாக மாறலாம்.
நாளையே நடிகர் சங்கம் மீண்டும் ஒற்றுமையாக மாறக் கூடிய சூழல் கூட இங்கு உருவாகலாம் என்றும் தனது பேட்டியில் கூறியிருக்கிறார் நடிகர் சரத்குமார்.
Post a Comment