ஹைதராபாத்: உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்து வரும் பாகுபாலி படம் அடுத்த மாதம் திரைக்கு வந்துவிடும் நாமும் கண்டுவிடலாம் என்று அனைத்து மொழி ரசிகர்களும் பாரபட்சமில்லாமல் ஒருபக்கம் ஏங்கிக் கொண்டிருக்க, மறுபக்கம் சத்தமேயில்லாமல் ரிலீசிற்குத் தயாராகி விட்டது மற்றொரு சரித்திரப் படமாகிய ருத்ரம்மாதேவி.
எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகி வரும் பாகுபாலி படம் அனுஷ்கா, பிரபாஸ், சத்யராஜ், ராணா மற்றும் சுதீப் என ஏராளாமான நட்சத்திரங்களை வைத்து எடுக்கப் பட்டிருக்கிறது. அதே போன்று இயக்குனர் குணசேகரின் இயக்கத்தில் உருவாகி வரும் ருத்ரம்மா தேவி படமும் அனுஷ்கா, அல்லு அர்ஜுன், நித்யா மேனன் மற்றும் ராணா என இந்தப் படத்திலும் நட்சத்திரங்களைக் குவித்தே எடுத்திருக்கின்றனர்.
இரண்டு படத்திலும் அனுஷ்கா தான் நாயகி எனினும் நாயகர்களாக பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் என இரண்டு படங்களிலும் ஹீரோக்கள் வேறுபட்டிருக்கின்றனர். இரண்டு படங்களுமே சரித்திரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டவை, பாகுபாலியின் பட்ஜெட் கிட்டத்தட்ட 200 கோடி ருத்ரம்மா தேவிக்கு செலவு வெறும் 60 கோடி தான். ருத்ரம்மா தேவி 3D படமாக தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது.
பாகுபாலி பாகுபாடின்றி பலமொழிகளில் வெளியாகவிருக்கின்றது. இந்தப் படமும் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப் பட்டிருக்கின்றது, தற்போது பிரச்சினை படங்களின் வேறுபாடு அல்ல இரண்டில் எது முதலில் வெளியாகப் போகிறது என்பதுதான். அனேகமாக பாகுபாலியை ரிலீசில் ருத்ரம்மாதேவி முந்திக் கொண்டுவிடும் என்று கூறுகிறார்கள். இரண்டு படங்களும் வெளியான உடனே சமூக வலைதளங்களில் பின்வரும் தலைப்பில் கண்டிப்பாக பட்டிமன்றங்கள் நடக்கும், பட்டிமன்றத் தலைப்பு என்னவென்று கேட்கிறீர்களா சிறந்த படம் ருத்ரம்மா தேவியா அல்லது பாகுபாலியா என்பது தான்.
பாகுபாலி புயலைத் தாங்குமா ருத்ரம்மா தேவி...பார்க்கலாம்
Post a Comment