விதவிதமான ஹெஷ்டேக்கால் டிவிட்டரில் ட்ரெண்டானது புலி பர்ஸ்ட் லுக்

|

சென்னை: நேற்று இரவு 12 மணியளவில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக்கை புலி படக்குழுவினர் வெளியிட்டனர். ராஜா போன்று கையில் வாள் வைத்துக் கொண்டு விஜய் நிற்பதுபோன்று அந்தப் போஸ்டர் உள்ளது.

விஜயின் 40 வது பிறந்த தினம் நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட உள்ள நிலையில், பிறந்த நாளுக்கு முன்னதாகவே புலி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்டு அவரின் ரசிகர்கள் கொண்டாட்டத்தினை இரட்டிப்பாக்கி விட்டனர் புலி படக்குழுவினர்.

Puli First Look Now Trending In Twitter

புலி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதை முன்னிட்டு விதவிதமான ஹெஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் புலி படத்தின் பர்ஸ்ட் லுக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி விடியவிடிய இணையதளத்தில் கொண்டாடித் தீர்த்தனர் விஜய் ரசிகர்கள்.

புலி படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று இரவு வெளியானதை ஒட்டி விஜய் ரசிகர்கள் #PartyToNightWithPuliFL என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி அதனை இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி கொண்டாடி உள்ளனர்.

அதோடு மட்டுமின்றி புலியின் பர்ஸ்ட் லுக் வெளியானதை முன்னிட்டு #PulihasArrived என்னும் ஹெஷ்டேக்கையும் உருவாக்கி அதனையும் இந்திய அளவில் ட்ரெண்டடிக்க வைத்து விட்டனர் விஜய் ரசிகர்கள்.

தொடர்ந்து டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது புலி படத்தின் பர்ஸ்ட் லுக், நாளை விஜயின் பிறந்த தினம் வேறு வருவதால் இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு ட்விட்டர் ட்ரெண்டிங்கில் விஜயை முதலிடத்தில் வைக்க சபதம் போட்டு வேலை செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

தீயா வேலை செய்யணும் குமாரு........

 

Post a Comment