வடிவேலு நடித்த எலி படத்துக்கோ, விஜய் நடித்த புலி படத்துக்கோ என் படம் போட்டியில்லை. நான் தனி வழியில் பயணிக்கிறேன், என்றார் நடிகர் சந்தானம்.
சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படம் வரும் ஜூன் 12-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படம் வெளியான ஒரு வாரம் கழித்து வடிவேலுவின் எலியும், அடுத்த சில வாரங்களில் விஜய் நடித்த புலியும் வெளியாகிறது.
இந்த நிலையில், சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படம் எலிக்குப் போட்டியா என அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சந்தானம், 'என் படம் எலியோடும் மோதல.. புலியோடும் மோதல. நான் என் ரூட்ல போறேன். அவங்க படம் வேற.. ரேஞ்ச் வேற.
இன்னும் 3 படங்களில் தொடர்ந்து ஹீரோவா நடிக்கப் போறேன். அதுக்காக தொடர்ந்து ஹீரோவாத்தான் நடிப்பேன்னு சொல்ல வரல. பிடித்த மாதிரி கதைகள் அமைந்தால் காமெடியனாகவும் தொடர்வேன்," என்றார்.
சந்தானம் இப்போது தன் படத்துக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கெல்லாம் ரசிகர்களைச் சந்தித்து தன் படத்தை புரமோட் செய்து வருகிறார்.
Post a Comment