நல்ல நடிகையை வீட்டில் பூட்டி வைத்துவிட்டேனே..! - கமல் ஹாஸன்

|

சென்னை: நல்ல நடிகையான கவுதமியை வீட்டில் பூட்டி வைத்துவிட்டேனே என வருத்தப்பட்டார் நடிகர் கமல் ஹாஸன்.

கமல் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பாபநாசம்'. இதில் கமலுக்கு ஜோடியாக கவுதமி நடித்துள்ளார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்தான் இந்த பாபநாசம். மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய ஜீது ஜோசப்தான் தமிழிலும் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

Kamal regrets for stopping Gowthamai from acting career

இப்படத்தை ஜூலை மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கமல், கவுதமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், "பாபநாசம் படத்தில் எனக்கு ஜோடியாக கவுதமி நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு கவுதமி நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

Kamal regrets for stopping Gowthamai from acting career

இவரது நடிப்பைப் பார்த்து மிகவும் அசந்து போனேன். அம்மா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஒரு நல்ல நடிகையை வீட்டில் பூட்டி வைத்து விட்டேனே என்று வருத்தமாக இருந்தது," என்றார்.

மேடையில் இருந்த கவுதமி, இதைக் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்தார்.

 

Post a Comment