இயக்குநர் விஜய்க்கும் நடிகை அமலா பாலுக்கும் இப்போதுதான் திருமணம் நடந்த மாதிரி இருக்கிறது. ஆனால் அதற்குள் ஒரு ஆண்டு முடிந்து... இதோ இன்று முதல் திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.
கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் காதலித்த விஜய் -அமலா இருவருக்கும் கடந்த ஜூன் 12-ம் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்துக்குப் பிறகு சைவம் படத்தை இயக்கி, தயாரித்து வெளியிட்டார் விஜய். அந்தப் படம் ஓரளவு நன்றாகவே ஓடியது. தேசிய விருது கூட வென்றது. இப்போது இது என்ன மாயம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அமலா பாலும் திருமணத்துக்குப் பிறகு நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் நடித்த வேலையில்லா பட்டதாரி பெற்ற வெற்றி, அவரை தொடர்ந்து படங்களில் நடிக்கத் தூண்டியது. இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக ஹைக்கூ படத்தில் நடித்துள்ளார்.
இன்று தங்களின் முதல் திருமண நாளை கேரளாவில் உள்ள குமரகத்தில் தனி படகு வீட்டில் நண்பர்கள் - உறவினர்களுடன் கொண்டாடுகின்றனர் விஜய்யும் அமலாவும்!
Post a Comment