ரஜினி - ஷங்கர் மீண்டும் இணையும் பிரமாண்ட படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நீரவ் ஷா.
இந்திப் படங்களில் பணியாற்றிவந்த நீரவ் ஷா, சண்டக்கோழி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து போக்கிரி, பில்லா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், விஜய் ஆகியோரின் நிரந்தர ஒளிப்பதிவாளர் எனும் அளவுக்கு தொடர்ந்து அவர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தார்.
இந்த நிலையில், அவருக்கு அடுத்த புரமோஷன் கிடைத்துள்ளது. ரஜினியை வைத்து ஷங்கர் பிரமாண்டமாக உருவாக்கவிருக்கும் எந்திரன் 2 படத்தின் ஒளிப்பதிவுப் பொறுப்பு நீரவ் ஷாவிடம் வந்துள்ளது. முதலில் ரத்னவேலுதான் ஒளிப்பதிவு செய்வதாகக் கூறப்பட்டது. இப்போது நீரவ் ஷாவை ஷங்கர் ஒப்பந்தம் செய்துள்ள தககவல் வெளிவந்துள்ளது.
கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் ஆகஸ்டில் தொடங்கி டிசம்பரில் முடிகிறது. அதற்கடுத்து ரஜினி - ஷங்கரின் எந்திரன் 2 தொடங்குகிறது.
Post a Comment