சென்னை: இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மணிரத்தினத்திற்கு, நியூயார்க்கில் உள்ள மியூசியம் ஆப் தி மூவிங் இமேஜ் என்ற அருங்காட்சியகம் நேரில் அழைத்துக் கெளரவப்படுத்தவுள்ளது.
59 வயதாகும் மணிரத்தினம் மிக முக்கியமான இயக்குநர் என்று அந்த மியூசியம் புகழாரம் சூட்டியுள்ளது. இந்த கெளரவமானது நீண்ட காலத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டியது. தாமதமாக தற்போது நடைபெறவுள்ளதாக அந்த மியூசியத்தின் இயக்குநர் ரிச்சர் பெனா கூறியுள்ளார்.
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை மணிரத்தினம் இந்த மியூசியத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். இந்த நாட்களில் அவர் இயக்கிய ரோஜா, பாம்பே, தில் சே ஆகிய படங்கள் திரையிடப்படும்.
மிகவும் அரிய வகை இயக்குநர் மணிரத்தினம். மிகச் சிறந்த படங்களை உருவாக்கும் திறமை படைத்தவர். புத்திசாலியான இயக்குநரும் கூட என்றும் அந்த மியூசியம் வர்ணித்துள்ளது.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் திருப்தி அடையச் செய்பவர் மணிரத்தினம் என்றும் ரிச்சர்ட் பெனா கூறியுள்ளார்.
Post a Comment