நான் பார்த்ததிலேயே சிறந்த ஜென்டில்மேன் அஜீத் தான் என்று வில்லன் நடிகர் கபீர் சிங் கூறியுள்ளார்.
சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அஜீத்குமார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும், தங்கையாக லட்சுமிமேனன் நடித்து வருகிறார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்து முடிந்துள்ளது. இதில், அஜித், லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இதில் அஜித் மற்றும் இப்படத்தில் வில்லனாக நடிக்கும் கபீர் சிங் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.
அஜித்துடன் நடித்த அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ள கபீர் சிங், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:
"அஜித்தை இப்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். அவர் ஒரு ஜென்டில்மேன், அற்புதமான மனிதர், வைரம் போன்றவர். நிஜ வாழ்க்கையில் ஹீரோ, ஒழுக்கத்தின் மறு உருவம், உதவுவதில் சிறந்தவர். அஜித்தை பொருத்தவரை இயக்குனர், கேமராமேன், லைட்மேன் படக்குழுவினர் அனைவரையும் சமமாகப் பார்க்கக் கூடியவர். தமிழ் சினிமாவில் பெரிய படத்தில் சிறந்த அறிமுகம் கொடுத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment