ரம்ஜான் ஸ்பெஷலாக வருகிறது கமல் ஹாஸனின் பாபநாசம்!

|

கமல் ஹாஸன் நடித்துள்ள பாபநாசம் படம் வரும் ஜூலை 17-ம் தேதி வெளியாகிறது.

கமல்ஹாசனின் உத்தமவில்லன் படம் கடந்த மாதம் வெளியானது. அவர் நடித்துள்ள விஸ்வரூபம் 2, பாபநாசம் ஆகிய இரு படங்கள் இன்னும் வெளியாக வேண்டியுள்ளன. இப்போது அவர் தூங்கா வனம் படத்தில் நடித்துக் கொண்டுள்ளார்.

Kamal's Papanasam on July 17th

கமலஹாசனின் பாபநாசம் படத்தை ரம்ஜான் பண்டிகையையொட்டி வரும் ஜூலை 17-ம் தேதி வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதன் ஆடியோ இந்த மாதம் 2 அல்லது 3 வாரத்தில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

கொலைபழியில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற போராடும் குடும்ப தலைவன் கதைதான் இந்த பாபநாசம்.

மலையாளத்தில் மோகன் லால் - மீனா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தை, அந்தப் படத்தை இயக்கிய ஜீத்து ஜோப்பே தமிழில் கமல், கவுதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோரை வைத்து இயக்கியுள்ளார்.

'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லால் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ஜார்ஜ் குட்டி. ‘பாபநாசம்' படத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் கதாபாத்திரத்திற்கு சுயம்புலிங்கம் என பெயர் .

இந்தப் படத்தில் மலையாள மோகன்லாலின் மகன் ப்ரணவ் அறிமுகமாகிறதார். இவரது பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாபநாசத்தில் போலீஸ் ஐ.ஜியாக ஆஷா சரத்தும், கமலின் மூத்த மகளாக ஜில்லாவில் நடித்த நிவேதா தாமஸும், இளைய மகளாக த்ரிஷ்யம் படத்தில் நடித்த எஸ்தரும் நடிக்கிறார்கள்.

 

Post a Comment