ஈராஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

|

ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைப் பொறுப்பிலிருந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் ராஜினாமா செய்துள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

சௌந்தர்யா அஸ்வின் ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘எனது குழந்தையுடன் நேரம் செலவிட வேண்டி ஈராஸ் நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறேன். மேலும் எனது அடுத்த கட்ட பணியிலும் ஈடுபட உள்ளேன்,' என்று அவர் தெரிவித்துள்ளார்.

Soundarya Rajini quits from Eros

'கோச்சடையான்' படத்தின் இசை வெளியீட்டின் போதே ரஜினி சௌந்தர்யாவை அவரது குடும்ப வாழ்க்கையை முதலில் கவனிக்கவும் என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதே போல் இப்போது குழந்தை பிறந்த பிறகு, குழந்தையுடன் நேரம் செலவிடும்படி ரஜினி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் சௌந்தர்யா அஸ்வின். லிங்கா விவகாரத்தில் ஈராஸ் நிறுவனத்தின் பாராமுகமும் கூட இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார்கள்.

'எப்படியோ.. ஈராஸை விட்டு ரஜினியும் அவர் குடும்பத்தினரும் விலகி வந்தது நல்லதுதான்.. தேவையில்லாமல் ரஜினியை சிக்கலில் மாட்டிவிட்டதில் ஈராஸுக்கும் பங்கிருக்கிறது' என்பதே கோலிவுட்டில் நிலவி வரும் பரவலான கருத்து.

 

Post a Comment