திருவனந்தபுரம்: கடந்த வாரங்களில் எந்தப் பிரச்சினையிலும் சிக்காமல் இருந்தார் மலையாள நடிகர் திலீப், தினசரி பத்திரிக்கைகளைப் புரட்டிய சேட்டன்கள் திலீப்பின் பேட்டியோ செய்தியோ இல்லாமல் தலையைப் பிய்த்துக் கொண்டு திரிந்தனர். மீண்டும் வந்தால் வான்டட்டாக தான் வருவேன் என்று இரண்டு நாட்களாக தினசரிகளை நிரப்பிக் கொண்டிருக்கிறார் திலீப் .
எல்லாம் ஒரு செல்போன் நம்பரால் வந்த வினை, எப்போதுமே திலீப்பின் பிரச்சினை காவ்யாதானே இதென்ன புதுக்கதை என்று கேட்பவர்களுக்கு உண்மையிலேயே இந்தப் பிரச்சினை உண்டானது ஒரு செல்போன் நம்பரால் தான். சமீபத்தில் வெளியான சந்திரேட்டன் எவிடயா படத்தில், திலீப் ஒரு பெண்ணிடம் தனது செல்போன் நம்பரை சொல்வார். 10 நம்பர்களும் முழுதாக சொல்லப்பட்ட அந்த சீனை நன்றாக நோட் செய்த நம்ம ஊரு பக்கிகள் தினமும் அந்த நம்பருக்கு போன் செய்து தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த போன் நம்பர் இந்தப் படத்தில் துளிக்கூட சம்பந்தப் படாத ஒரு பெண்ணுடையது, தற்போது தினசரி அர்த்த ராத்திரி வேலைகளிலும் அந்த நம்பரைத் தொடர்பு கொண்டு எல்லோரும் தொந்தரவு கொடுப்பதால் அந்தப் பெண் படத்தில் இருந்து தன்னுடைய நம்பரை நீக்கச் சொல்லி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதால் நஷ்ட ஈடும் தரவேண்டும் என்று வழக்கில் கூறியிருக்கிறாராம். இந்தப் பிரச்சினையில் தற்போது திலீப்பின் தலை தொடர்ந்து உருள்வதால் மனிதர் மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்.
எல்லாம் திலீப்போட ராசி...போல
Post a Comment