சிவா இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியில் அஜீத்துக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஏஎம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக ஸ்ருதியும் தங்கையாக லட்சுமி மேனனும் நடிக்கின்றனர். வில்லனாக கபீர் சிங்கும் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
நேற்று நடந்த படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியில் அஜித் மற்றும் வில்லன் கபீர் சிங் மோதும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அஜித்தின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுவிட்டது. வலியால் அவதிப்பட்ட அஜித்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தினர்.
ஆனால் அஜித் அவர்கள் பேச்சைக் கேட்காமல், தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு, அன்றைய காட்சிகளை முடித்துக் கொடுத்த பிறகுதான் சென்றாராம்!
Post a Comment