சுதந்திர தினத்தன்று வெளியாகும் அக்சய் குமாரின் பிரதர்ஸ்

|

மும்பை: 2011 ம் ஆண்டு வெளிவந்த வாரியர் என்ற ஹாலிவுட் திரைப் படத்தின் ரீமேக் படமாக இந்தியில் உருவாகி வரும் திரைப்படம் பிரதர்ஸ். அக்சய் குமார் மற்றும் சித்தார்த் மல்கோத்ரா ஆகிய இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் படம் இது.

அக்சய் குமார், சித்தார்த் மல்கோத்ரா மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் நடிப்பில் உருவாகி உள்ள இந்தப் படம், வரும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என ட்விட்டரில் தகவலை வெளியிட்டு உள்ளனர் படக்குழுவினர்.

தகவல் வெளியான உடனேயே # BROTHERS This Independence Day என்னும் ஹெஷ்டேக்கை உருவாக்கிய அக்சய் குமாரின் ரசிகர்கள் அதனை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி விட்டனர்.

அக்சய் குமார் மற்றும் சித்தார்த் மல்கோத்ரா இருவரும் குத்துச் சண்டை வீரர்களாக நடித்திருக்கும் இந்தப் படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளனர்.

கரன் மல்கோத்ரா இயக்கி வரும் இந்தப் படத்தில் கரீனா கபூர் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். ஜூன் 10 தேதியன்று வெளியான இந்தப் படத்தின் டிரைலரை சுமார் 40 லட்சத்திற்கும், அதிகமானோர் யூ டியூபில் கண்டுகளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment