பிழைப்பது சென்னையில்.. பழிப்பது தமிழ் நடிகர்களை.. இது நடிகர் சுரேஷின் சின்னபுத்தி!

|

எண்பதுகளில் தமிழின் அதிகபட்ச ப்ளாப் படங்களில் நடித்த ஹீரோ என்றால் அது அநேகமாக சுரேஷாகத்தான் இருக்கும் (பன்னீர் புஷ்பங்கள், கோழி கூவுது தவிர).

படத்திலும் நிஜத்திலும் இவரைப் போல வழிசல் ஆசாமிகள் யாரும் இல்லை எனும் அளவுக்கு 'நல்ல பெயர்.' நான்கு திருமணங்கள் செய்து, நான்கிலும் தோற்ற இவர், இப்போது குப்பைக் கொட்டிக் கொண்டிருப்பதும் சென்னையில்தான்.

ஆனால் இவருக்கு தமிழ் நடிகர்கள் மீது ஏனோ அத்தனை வெறுப்பு, பொறாமை. அதை சமீபத்தில் ட்விட்டரில் வெளிப்படுத்தியிருந்தார்.

Actor Suresh spit venom against Tamil actors

சமீபத்தில் பாகுபலி ட்ரைலர் வெளியாகி, சினிமா உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது. அதில் சத்யராஜ், நாசர் என தமிழ் முகங்களைப் பார்த்து கடுப்பாகி கண்டபடி எழுதியிருக்கிறார் சுரேஷ்.

"ராஜமவுலியின் `பாகுபலி` படத்துக்கு எனது ஆதரவு இல்லை. ஏனெனில் எத்தனையோ நல்ல தெலுங்கு குணச்சித்திர நடிகர்கள் இருக்க, தமிழ் நடிகர்களான நாசரையும் சத்தியராஜையும் நடிக்க வைக்க வேண்டிய அவசியமென்ன?"

-இதுதான் ட்விட்டரில் அவர் கக்கியுள்ள விஷம். இதனை தெலுங்கு நடிகர்கள், ரசிகர்களே கூட விரும்பவில்லை. காரணம் அவர்களுக்கே தெரியும்... தமிழ் சினிமாவில் அவர்கள் எந்த அளவு செல்வாக்குடன் திகழ்கிறார்கள் என்று. அதனால்தான் சுரேஷை ட்விட்டரில் இப்போது வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சுரேஷுக்கு இந்த ரிட்டயர்மென்ட் காலத்திலும் வில்லன், குணச்சித்திர வேடங்கள் என கை கொடுத்துக் கொண்டிருப்பது தமிழ் சினிமாதான். இன்றைக்கும் விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார் இதே சுரேஷ்.

பாகுபலி படத்தை எடுத்த எஸ்எஸ் ராஜமவுலி சென்னையில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, சென்னையில் படித்து, சென்னையில் சினிமா கற்று ஆந்திரா போனவர். ஆந்திராவில் சினிமா எடுத்தாலும், தமிழ் ரசிகர்களை மறக்காமல், பாகுபலியை நேரடி தமிழ்ப் படமாக உருவாக்கியிருக்கிறார். பிரபாஸையும், ராணாவையும் அனுஷ்காவையும் தமிழ் வசனங்கள் பேசி நடிக்க வைத்துள்ளார்.

ஆனால் இந்த சுரேஷ் ஆந்திராவில் பிறந்து தமிழ் சினிமாவில் சம்பாதித்து இன்னும் இங்கேயே காலம் தள்ளிக் கொண்டு தமிழ் நடிகர்களைப் பழித்திருக்கிறார்.

இது போன்ற நபர்களை இனியும் தாங்கிப் பிடிக்கப் போகிறதா தமிழ் சினிமாவும் நடிகர் சங்கமும்?

 

Post a Comment