ஒரு பப்பாளியே பப்பாளி டயட்டில் உள்ளதே!

|

சென்னை: நடிகை சோனா உடல் எடையை குறைக்க, தோலை மினுமினுப்பாக வைத்துக் கொள்ள பப்பாளி டயட்டில் உள்ளாராம்.

படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வருபவர் சோனா. நடிப்பது தவிர்த்து அவர் தொழில் அதிபராகவும் உள்ளார். சென்னை பெண்ணான சோனா அவ்வப்போது சர்ச்சையில் சிக்கியதால் மக்கள் அவரைப் பற்றி அதிகம் பேசினர்.

சோனா என்றால் கொழுக் மொழுக் என்ற அவரது உருவம் தான் நினைவுக்கு வரும். இந்நிலையில் குண்டாக இருப்பது அவருக்கே போர் அடித்துவிட்டது போல. அதனால் டயட்டில் குதித்துவிட்டார். பப்பாளிப் பழ டயட்டில் இறங்கியுள்ளார் சோனா. பார்த்திபன் ஸ்டைலில் சொன்னால் ஒரு பப்பாளியே பப்பாளி சாப்பிடுகிறதே அடடே ஆச்சரியக்குறி.

இந்நிலையில் டயட் குறித்து சோனா ட்விட்டிரல் கூறியிருப்பதாவது,

பப்பாளி டயட்... தெரிகிறது அல்லவா... தோல் மற்றும் உடல் எடை... இப்ப்பீ.. குட்நைட் மக்களே என்று தெரிவித்துள்ளார்.

பப்பாளி டயட்டில் இருக்கும் சோனாவின் கன்னம் லேசாக வற்றியது போன்று தான் தெரிகிறது. விரைவில் ஸ்லிம் சோனாவை பார்க்கலாம் போன்று.

 

Post a Comment