சென்னை: இன்றைய நாட்களில் ஒரே நாளில் மூன்று பெரிய படங்கள் வெளிவந்தால் தியேட்டர் கிடைப்பதிலிருந்து, கிடைக்கும் வசூல் வரை அனைத்துமே பிரச்சினையாகிவிடுகிறது.
இதெல்லாம் நன்கு தெரிந்திருக்கும் அனுபவசாலி நடிகரான கமல் ஹாஸனே இதைத்தான் செய்யப் போகிறார். வேறு வழியில்லை அவருக்கும்.அடுத்த மாதம் ரம்ஜான் வெளியீடாக நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படம் வெளியாகிறது.
ரஜினிமுருகனுடன் தனது மாரியை மோதவிட்டு களத்தில் குதிக்கிறார் நடிகர் தனுஷ். இருவரின் மோதலில் தற்போது மூன்றாவதாக இணைந்திருக்கிறார் கமல். அவரது பாபநாசம் படமும் அதே தேதியில் தான் வெளியாகிறது. ஆக ரம்ஜானுக்கு தற்போது தமிழ் சினிமாவில் மூன்று பெரிய நடிகர்கள் மோதுகிறார்கள்.
ரஜினிமுருகன் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு முன்பே வெளியிட்டு விட்டது, மாரி படம் இடையில் வந்தது, தற்போது பாபநாசம் கடைசியில் வந்து இணைந்துள்ளது.
ஏற்கனவே சிவாவிற்கும் தனுஷிற்கும் இடையில் நடக்கும் பனிப்போரின் உச்சமாக இந்த ரம்ஜான் மோதல் பார்க்கப்படுகிறது. இப்போது கமல் படமும் இணைந்துள்ளதால் எந்தப் படம் தியேட்டரில் ஓடப் போகிறது, எது பெட்டியை விட்டு ஓடப் போகிறது என்பது தெரியவில்லை பார்க்கலாம்!
Post a Comment