ஹைதராபாத்: தமிழில் நமீதா என்று ஒரு நடிகை இருந்தாரே ஞாபகம் இருக்கிறதா?ஞாபகம் இல்லாதவர்கள் ஆட்டோ ஜானி வரும்போது பார்த்து ரீவைண்ட் செய்து கொள்ளுங்கள்.
நம்ம விஜயகாந்த் படமான எங்கள் அண்ணா என்ற தமிழ் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக 2004ல் அறிமுகமான நமீதா தொடர்ந்து ஏய்,இங்கிலீஷ் காரன், பில்லா மற்றும் ஜெகன்மோகினி போன்ற படங்களில் நடித்து ஏராளாமான இளைஞர்களை தன் "தாராள" நடிப்பால் கவர்ந்தவர்.
தமிழில் கடைசியாக இளைஞன் என்ற ஒருபடத்தில் நடித்ததோடு காணாமல் போன நமிதா தற்போது கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், விரைவில் அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று ஒரு அறிக்கையைக் கொடுத்து தான் இருப்பதைக் கட்டிக்கொண்ட நமீதா தற்போது தான் நடிகையாக அறிமுகமான தெலுங்குலகில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
ஆமாம் நம்ம மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆட்டோ ஜானி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார், மற்ற நடிகைகள் யார் என்ன என்பது இன்னும் உறுதியாகாத நிலையில் நமீதா இந்தப் படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆட்டோ ஜானி படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையைக் குறைத்து வருகிறாராம் மெகா ஸ்டார்.
ஜோடிப் பொருத்தம் சும்மா அள்ளுது போங்க......!
Post a Comment