ருத்ரமாதேவி படத்தின் ட்ரைலரை வெள்ளிக்கிழமை வெளியிட்டார் இசையமைப்பாளர் இளையராஜா.
இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோப் 3 டி சரித்திரப் படமாக உருவாகியுள்ளது ருத்ரமாதேவி. குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ் - தெலுங்கில் நேரடிப் படமாக உருவாகியுள்ளது. மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.
காகதீய வம்சத்தைச் சேர்ந்த பெரும் அரசியான ருத்ரமா தேவியின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம்.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ருத்ரமாதேவி படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். லண்டனின் இந்தப் படத்துக்கு சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா வைத்து பின்னணி இசைச் சேர்த்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரைலரை நேற்று வெள்ளிக்கிழமை தனது இசைக் கூடமான பிரசாத் லேபில் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் படத்தின் தமிழ் தயாரிப்பாளரான தேனாண்டாள் பிலிம்ஸ் ராமசாமி, இயக்குநர் குணசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அனுஷ்கா, ராணா, அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்துள்ள ருத்ரமாதேவி, வரும் ஜூன் 26-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
Post a Comment