வளரும் நடிகை என்ற நிலையிலிருந்து முன்னணி நடிகையாக மாறி வரும் நந்திதா நடிக்கும் புதிய படம் காத்திருப்போர் பட்டியல்.
லேடி ட்ரீம் சினிமாஸ், பைஜா டாம் தயாரிப்பில் உருவாகிறது இந்தப் படம். ஏற்கனவே பரத் நடிப்பில் உருவான யுவன் யுவதி என்ற திரைப்படத்தை இவர்கள் தயாரித்துள்ளனர்.
காதலுக்காக, வேலை வாய்ப்புக்காக, திருமணத்துக்காக, அரசியல் பதவிக்காக, கல்லூரி சீட்டுக்காக, பேருந்தில் இடம் பிடிப்பதற்காக என நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு காத்திருப்பு பட்டியலில் காத்திருப்பவர்கள்தாம். அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும், காத்திருக்கும் தருணங்களையும் அடிப்படையாக கொண்டு இந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் பாலையா டி ராஜசேகர்.
இவர் பரத் பாலாவிடம் மரியான் படத்தின் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
காத்திருப்போர் பட்டியல் பற்றி கூறும்போது, "இது ஒரு நாளில் ஒரு இடத்தில் பல தரபட்ட மனிதர்களுடன் நடைபெறும் சுவாரஸ்யமான காதல் கதை.
சென்னையில் ஒரு நாள் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் இதில் கதாநாயகனாகவும், அட்டகத்தி, எதிர் நீச்சல், முண்டாசுபட்டி போன்ற வெற்றி படங்களில் நடித்த நந்திதா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர அருள்தாஸ், அப்புகுட்டி, செண்ட்ராயன், மனோபாலா, மயில்சாமி, நான் கடவுள் ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்," என்றார்.
மைனா, கும்கி, மான்கராத்தே, காக்கிச் சட்டை போன்ற வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளர் சுகுமார் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்க, லால்குடி இளையராஜா கலையமைப்பை கவனிக்கிறார். விஸ்வரூபம் படத்துக்காக தேசிய விருது பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment