சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்கும் கேம்ஷோவிற்கு டிவிகளில் தனி வரவேற்பு உள்ளது. வேந்தர் டிவியும் இதே பாணியில் 'ஜில் ஜங் ஜக்' என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.
இளைஞர்களைக் கவரும் விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி திரை நட்சத்திரங்களும் சின்னத்திரை நட்சத்திரங்களும் தங்கள் அதிக திறமையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கபப்ட்டுள்ளது.
நிஷா, சித்ரா என இரண்டு அழகான தொகுப்பாளினிகள் தொகுத்து வழங்க, இரண்டு பிரபலங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி கலகலப்பாக போகிறது
இது ஒரு கேம் ஷோ. பிரம்மாண்டமான அரங்கம்... அழகான தொகுப்பாளினிகள் நிஷா, சித்ராவின் வளவளா பேச்சு என போகிறது ஜில் ஜங் ஜக்... இது மூன்றும் மூன்று ரவுண்ட்.
ஜில் ரவுண்டில் திரையில் காட்டப்படும் படக்காட்சியில் பெண் பாத்திரத்திற்கு ஆண் குரல் கொடுக்க வேண்டும்.
ஜங் சுற்றில் ஆண் பெண் வேடம் போடுவது, ஜக் சுற்றில் உண்மையான தொழிலாளி ஒருவரை அரங்கிற்கு அழைத்து அவருடைய வேலையை நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலத்தை செய்யச் சொல்வது, என பலதரப்பட்ட நேயர்களையும் கவரும் விதத்தில், கலகலப்பு மற்றும் விறுவிறுப்போடு படு ஜாலியாக தயாரிக்கப்பட்டுள்ளது ஜில் ஜங் ஜக்.
நிஷாவும், சித்ராவும் இளமைத் துடிப்போடு தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கவலைகளை மறந்து அனைவரும் ரசிக்கும்படியான நிகழ்ச்சியாக இருக்கிறது என்பது ரசிகர்களின் கருத்தாகும்.
Post a Comment