மும்பை: ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாஸான் படத்தின் முதல் பார்வை நேற்று வெளியாகியது. 68 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடைப்பட்ட மாஸான் கேன்ஸ் திரைவிழாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
படத்தைப் பார்த்து விட்டு அனைவரும் எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டும் அளவுக்கு படத்தை எடுத்து இருக்கிறார் நீரஜ் காய்வன். வரும் 26 ம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகிறது, ஜூலை மாதம் 24 ம் தேதியில் படம் வெளியாகிறது.
கேங் ஆப் வாஸிபூர் படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப் படத்தைத் தயாரித்து இருக்கிறார். ரிச்சா சதா, சஞ்சய் மிஸ்ரா , ஸ்வேதா திரிபாதி மற்றும் விக்கி கவுஷால் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
படத்தின் முதல் பார்வையில் ஆற்றின் நடுவே நாயகனும், நாயகியும் படகில் இருப்பது போன்று காட்சியை வெளியிட்டு இருக்கின்றனர்.
இரண்டு விதமான கதைகள் படத்தில் வருவது போல காட்சிகள் அமைத்திருக்கிறார் இயக்குநர் நீரஜ். முதல் கதையில் மயானத்தில் வெட்டியான் வேலை பார்க்கும் தாழ்ந்த ஜாதிப் பையன் உயர்ந்த ஜாதிப் பெண்ணை காதலிப்பது போலவும், இரண்டாவது கதையில் உயர்ந்த ஜாதிப் பெண் மற்றும் அவரது தந்தை இருவரும் இணைந்து செக்ஸ் ஊழலை ஒழிப்பது போலவும் இரண்டுவிதமான கதைகளைக் கையாண்டு இருக்கிறார் படத்தின் இயக்குநர் நீரஜ்.
Post a Comment