இப்ப எல்லாம் டிவி சீரியலில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலோனோர் சொந்த பிசினஸ் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காரணம் வாய்ப்பு எப்ப வரும் எப்ப போகும் என்று தெரியாது ஆனால் பிசினஸ்தான் நிரந்தரம் என்பதை உணர்ந்து கொண்டிருக்கின்றனர் சீரியல் நடிகைகள் எனவேதான் பிசியாக இருக்கும் போதே பிசினஸை தொடங்கி பிக்அப் செய்துவிடலாம் என்று நினைக்கின்றனர்.
இளவரசி நடிகை அழகு நிலையம், ரெடிமேட் ஆடை கடையைத் தொடங்கினார். இப்போதோ பாசமலர் நடிகையும் சொந்த பிசினஸ் ஆரம்பித்துள்ளாராம். கேரளாவாசியான இந்த நடிகை மலையாளம், தமிழ் என சீரியல்கள், திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்போது சூரிய தொலைக்காட்சியில் ஒரு சீரியல் தவிர சொல்லிக்கொள்ளும்படியாக வேறு எந்த சீரியலும் இல்லையாம்.
இதனையடுத்து யோசித்துப் பார்த்த நடிகை தனது தாயாருடன் சேர்ந்து மணப்பெண் ஆடை வடிவமைப்பு கடையை சென்னையில் தொடங்கிவிட்டார். கேரளாவின் புகழ்பெற்ற சுவர் ஓவியங்களை ஆடைகளில் வரைந்து கொடுக்கும் கடையாம். கேரளா இந்து மணமக்கள் அணியும் பிரத்யேக ஆடையாம் இது.
சென்னையில் தொடங்கியுள்ள பாசமலர் நடிகை விரைவில் கேரளாவிலும் இதேபோன்ற ஒரு கடையை தொடங்கப்போகிறாராம். நடிகையின் அம்மாவும் இதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறாராம். சூட்டோடு சூட்டாக நாயகிக்கு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளாராம் அம்மா. பாசமலர் சாவித்திரிக்கு ஏற்ற ஜெமினிகணேசன் எங்கிருக்கிறாரோ?
Post a Comment